கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி மோதல் – ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் வசை பாடி கொண்டதால் பரபரப்பு( வீடியோ இணைப்பு)
கேரளா வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் கோவை வழியாக டெல்லி செல்ல திட்டமிட்டு விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரை வழி அனுப்புவதற்காக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார் மற்றும் கோவை செல்வம் என இரு தரப்பினர் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினரும் டெல்லி புறப்பட இருந்த வேணுகோபாலிடம் சரமாரியாக புகார் அளித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு படையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் மூத்த நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் இரு கோஷ்டியாக மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.