பள்ளி கல்லூரிகளை குறிவைத்து விடாது துரத்தும் வெடிகுண்டு மிரட்டல் ! – திருச்சியில் என்ன நடக்கிறது ? ( வீடியோ இணைப்பு)
தமிழ்நாட்டில் சமீப காலமாக கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சியில் நேற்று ஒரேநாளில் 9 கல்லூரிகள் மற்றும் இரண்டு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு பரிசோதனை செய்தனர். பல மணிநேரம் சோதனையிட்டும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் இன்றும் இதேபோல் கல்லூரிகள் உள்ளிட்ட 6 கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி, கல்லூரிகளுக்கு மெயில் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது ? எதற்காக அனுப்பினார் ?என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் நடத்தப்பட்ட சோதனை, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.