திருச்சி அரசு சட்டக் கல்லூரி என்சிசி சார்பில் பிளாஸ்டிக் இல்லாத விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணி…!
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் திருச்சி அரசு சட்டக் கல்லூரி தேசிய மாணவர் படை தமிழ்நாடு பட்டாலியன்-2 சார்பில் பிளாஸ்டிக் இல்லாத விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணி காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கல்லூரி என்சிசி மாணவ-மாணவிகள் மற்றும் நேரு யுவகேந்திராவை சேர்ந்த மாணவ- மாணவிகள் இணைந்து கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று கோஷங்கள் எழுப்பியபடியே சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணா ஸ்டேடியம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக் கல்லூரி முதல்வர் எம்.ராஜேஸ்வரன் மற்றும் உதவி பேராசிரியர் எஸ்.முருகேசன், நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இப்ராஹிம், தமிழ்நாடு-2 பட்டாலியன் அவில்தார் செந்தில் மற்றும் நேரு யுவ கேந்திராவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சட்டக் கல்லூரி உதவி பேராசிரியை மற்றும் என்சிசி அதிகாரி ஜி.சாந்தசீலா பேரணியை ஒருங்கிணைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Comments are closed.