சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-வட மாநில தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? ( வீடியோ இணைப்பு)
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள முத்தல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று(28-09-2024) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பட்டாசுகள் மலைபோல குவித்து வைக்கப்பட்டு இருந்தது. தீ விபத்தில் அந்த பட்டாசுகள் டமார், டமார் என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைக்குள் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தீயை முழுமையாக அணை த்த பிறகே அது குறித்த முழுமையான தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.