ரூ.2 கோடியே 19 லட்சத்தில் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு அறையில் விரிசல், டைல்ஸ்கள் சேதம்: நேரில் பார்வையிட்ட சட்டமன்ற குழு அதிர்ச்சி…! (வீடியோ இணைப்பு)
தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர் சீனிவாசன், உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்ரபாணி, நல்லதம்பி, மாங்குடி மோகன் ஆகியோர் இன்று(26-09-2024) திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது மருத்துவ கல்லூரியில் ரூ.2 கோடியே 19 லட்சத்து 51 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட்ட தேர்வு கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் பெரும்பாலான இடங்களில் விரிசல் காணப்பட்டது. பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் சேதம் அடைந்து இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற குழுவினர் இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், கட்டிடத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மருத்துவத் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.