ரூ.2-க்கு சத்துணவு முட்டையை வாங்கி ரூ.15க்கு ஆம்லெட் போட்டு விற்ற ஹோட்டலுக்கு “சீல்”…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் ஸ்ரீ ரத்னா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அங்கு அட்டை, அட்டையாக சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த முட்டைகளை யாரிடமோ ஒரு முட்டை ரூ.2க்கு வாங்கி அதை ஆம்லேட் போட்டு ரூ.15க்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல்கள் பறந்தன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டாட்சியர் மோகன் மற்றும் சத்துணவு திட்ட அலுவலர்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகள் அதிக அளவில் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ஓட்டலை மூடி “சீல்” வைத்தனர்.
மேலும், அந்த ஓட்டலுக்கு சத்துணவு முட்டைகளை சப்ளை செய்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.