ராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி வந்தபோது கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு…!( வீடியோ இணைப்பு)
ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் தினமும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு இரவு 1-30 மணி அளவில் வந்து பின்னர் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் நேற்று 1-30 மணி அளவில் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்போது திடீரென ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்றது. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் கழன்ற பெட்டிகளை உடனடியாக சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. 3 பெட்டிகள் கழன்றதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரயில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அந்த ரயில் இன்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டு மற்றொரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பெட்டிகள் கழன்ற சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.