திருச்சி, பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபு 23. இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்தார் கடந்த ஜூலை மாதம் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பிரபு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது பிரபு அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் , சிறுமியை மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.