கொல்கத்தா சம்பவத்திற்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள்… !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று(17-08-2024) இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நோயாளிகளின் நலன்கருதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கொல்கத்தா சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இதில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ளதாகவும், வழக்கமாக அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை பொறுப்பு டீன் அரிசியா பேகம் தெரிவித்துள்ளார். இன்று மாலை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பங்கேற்கும் அமைதி பேரணி நடைபெற உள்ளதாக தெரிகிறது.
Comments are closed.