சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கான்பூருக்கும் பீம்சென் ரயில் நிலையத்துக்கும் இடையே இன்று(17-08-2024) அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கான்பூரில் உள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே ரயில் எண் 19168 சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான து. இந்த விபத்தில் உயிர் சேதமோ, காயமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கல்லின் மீது ரயில் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
Comments are closed.