திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தனி சேம்பர் வசதி- பார் கவுன்சில் தலைவரிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மனு…!
பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ், இணை தலைவர்கள் அசோக், பிரிசில்லா பாண்டியன், மாரப்பன் ஆகியோரை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் பி.வி.வெங்கட் நேரில் சந்தித்தார். அப்போது அவர், 125 ஆண்டு பழமை வாய்ந்த திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியறை( சேம்பர்) வசதி செய்து தர உயர்நீதிமன்ற கட்டிடக் குழு நீதிபதிகளிடம் பரிந்துரைந்து ஆவன செய்து தருமாறு கோரிக்கை மனுவினை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
Comments are closed.