ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஒருவாரம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments are closed.