Rock Fort Times
Online News

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரியும்,  ஆளும் திமுக அரசு, தேர்தலின்போது  மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததை உடனடியாக அமல்படுத்த கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் இன்று(29-07-2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யு .சி மாவட்ட பொதுச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஜி.ஆர்.தினேஷ்குமார், மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராஹிம், மாதர் சங்க மாவட்ட தலைவர் அஞ்சுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்