Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டா – ரூ.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர் !

திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வீடு அற்றவர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கியதோடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ. 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 524 திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு,ரூ.106 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள், மேலும் ரூ. 99.26 கோடி மதிப்பீட்டில் 6,176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை அருகே உள்ள பழங்குடியின மாணவர்கள் பயிலும் உண்டு உறைவிடப்பள்ளியில் படித்த ரோகிணி, JEE தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று என்.ஐ.டியில் பயிலும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு அமைச்சர்கள் பொன்னாடை போற்றி கேடையம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார்,எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், ப.அப்துல் சமது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.தேவநாதன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்