திருச்சி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை. இவர் மீது கொலை கொள்ளை ஆழ்கடல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் அவர் புதுக்கோட்டையை அடுத்த வம்பன் காட்டுப் பகுதியில் இருப்பது பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டபோது அவர் போலீசாரை தாக்கியது தாக்கியதால் போலீசார் தங்களது தற்காப்புக்காக அவரை எண்கவுண்டர் செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் ரவுடி துரையை எண்கவுண்டர் செய்தபோது அவருடன் ஒருவர் இருந்ததாகவும், சம்பவத்தின்போது அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியதாகவும் ஆலங்குடி போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று துரைசாமியுடன் கிளம்பிச் சென்ற பிரதீப்குமாரை காணவில்லை. அவரை காவல்துறையினர் என்ன செய்தனர்? என்று தெரியவில்லை.அவரை தங்களிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு, துரைசாமியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலையத்தில், பிரதீப்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ஐயப்பன். இவர், இரவு துவாக்குடி அருகே பழங்கனாகுடி பிரிவு சாலையில், தனது இருசக்கர வாகனத்தில் மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த வாலிபர் ஒருவர், அவரை வழிமறித்து, அவரின் கழுத்தில் கைத் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து துவாக்குடி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது, என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் பிரதீப் குமார் (வயது 29) என்பது தெரிய வந்தது. அதையடுத்து, பிரதீப்குமாரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து வழிப்பறி செய்த தங்கச் செயின், வழிப்பறிக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.