திருச்சி, திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 4.02 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் கையகப்படுத்தினர். திருவெறும்பூர் வட்டம், எல்லக்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நிலத்தைக் கையகப்படுத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்றப் பணியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர் முன்னிலையில் நடவடிக்கை எடுத்தனர். கோவிலுக்கு சொந்தமான சுமார் 4.02 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுமலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் தேவராஜ், எழுத்தர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்களிடம் கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. நில அளவை மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் திருவெறும்பூர் நில அளவையர் விக்னேஷ், எல்லக்குடி வி.ஏ.ஓ தனசேகர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.25 கோடி என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
Comments are closed.