Rock Fort Times
Online News

திருச்சி அருகே பிளாக்கில் மது வாங்கி குடித்தவருக்கு உடல் நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதுஉத்தமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று(23-06-2024) அதிகாலை 3 மணி அளவில் பூவாளூர் பின்னவாசல் டாஸ்மாக் மது கடைக்கு சென்று அங்கு பிளாக்கில் விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீருடன் ரத்தம் வெளியேறியதை கண்டதும் பதறி துடித்தார். கணவனின் நிலைமை கண்ட அவரது மனைவி உடனடியாக அருகில் உள்ள லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் மனைவி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் அதிகாலை 3 மணி அளவில் அருகில் உள்ள பூவாளூர் பின்னவாசல் அரசு மதுபான கடைக்கு சென்று பிளாக்கில் மது வாங்கி குடித்ததாகவும், அதன் பின்னரே வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்