Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்றவர்கள் கைது

திருச்சி கே.கே.நகர் மங்கம்மாசாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று ,தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கஞ்சா விற்றதாக கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஹரிஹரன் (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .இதே போல், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வரகனேரியைச் சேர்ந்த அங்கமுத்து, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த நாராயணசாமி ஆகிய இரண்டு பேரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்