அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக விருதுநகர் தொகுதி இளம் வேட்பாளர் விஜய பிரபாகரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூருக்கு கடைசிவரை “டப்” கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு சுற்றில் இவர் முந்த அடுத்த சுற்றில் அவர் முந்த இவ்வாறாக கடைசிவரை பெரும் பரபரப்பாகவே இருந்தது. கடைசியாக சுமார் 5,000 வாக்கு வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்தாலும் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அரசியல் நோக்கர்கள் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்து விட்டார் என்றே சொல்லலாம்.
தற்போதைய நிலவரப்படி வாக்கு விவரம் வருமாறு:-
மாணிக்கம் தாக்கூர்( காங்) :3,74, 473
விஜய பிரபாகரன் (தேமுதிக):3, 68,063
ராதிகா சரத்குமார் (பாஜக): 1,59,744

Comments are closed.