Rock Fort Times
Online News

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக திருச்சியை சேர்ந்தவரிடம் ரூ.16 லட்சம் மோசடி…!

திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் பிரவீனா வேந்திரன் (வயது 33). இவர் கல்வி அறக்கட்டளை மற்றும் வேலை வாய்ப்பு சேவை மையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த சிவகுமார், விஜயலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் இவரிடம் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தாங்கள் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரவீனா வேந்திரன் தனது அறக்கட்டளை மூலம் 16 பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப ரூ.16 லட்சத்தை சிவகுமார் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் முதல் கட்டமாக 16 பேருக்கு விசா எடுத்து கொடுத்துள்ளனர்.
ஆனால், அது சுற்றுலா விசா என்பது தெரியவந்தது. மேலும், வெளிநாட்டு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து பிரவீனா, சிவகுமார் தரப்பினரிடம் கொடுத்த ரூ.16 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் தராமல் இழுத்தடித்து வந்தனர். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சிவகுமார் தரப்பினர் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பிரவீனா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் சிவகுமார் மற்றும் அவரது தரப்பினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்