Rock Fort Times
Online News

பெண் போலீஸ் குறித்து தவறான கருத்து: சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் கைது…!

பெண் போலீசார் குறித்து அவதூறான தகவல்களை பரப்பியதாக சவுக்கு மீடியாவின் ஆசிரியரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெண் போலீசார் உட்பட பலர் அவர் மீது தொடர்ச்சியாக புகார்களை அளிக்க இதுவரை அவர் மேல் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா கைப்பற்றப்பட்டதால் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு காவல்துறையால் “சீல்” வைக்கப்பட்டது. இந்நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகவும், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்ததற்காகவும் ரெட் ஃப்ளிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்