Rock Fort Times
Online News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் நாளை மாநாடு- கடைகள் அடைப்பு…!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் நாளை(05-05-2024) வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினம், வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நாளை 5ம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது. மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் மற்றும் மண்டலத்தலைவர் கள் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றுகிறார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு பிரகட னத்தீர்மானத்தை முன்மொழிகிறார். வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங் கம், நாகாபுட்ஸ் தலைவர் கே.எஸ். கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் என். ஜெகதீசன், ஏ.எம்.ஆர்.ஆர் மகாராஜா டால்மில் நிறுவனர் ஏ.எம்.எம்.ஆர்.சந்திர குமார், ராஜ்மகால் மதுரை
ஆர். முருகானந்த், மதுரை பேமஸ் ஜிகர் தண்டா ஜி.ஜிந்தா மதார் மற்றும் பிரதர்ஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற உள்ளனர். பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றுகிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாநாட் டின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழா பேருரையாற்றவுள்ளனர்.

மாநாட்டில் திரளும் லட்சக்கணக்கான வணிகர்களின் வசதி கருதி மதுரை மாநாட்டு திடலில் மிகப் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பேருந்து, கார், வேன் நிறுத்தும் வசதி, இருசக்கர வாக னங்கள் தனியாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மண்ட லத்தலைவர் டி.செல்லமுத்து தலைமையில் நடந்து வருகிறது. மாலையில் நடைபெற வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் மாலை சிற்றுண்டி, இரவு உணவு, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, நாளை தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக வளாகம் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனம், மார்க்கெட், உணவகம், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்