Rock Fort Times
Online News

பெங்களூரு, கொல்கத்தா விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருச்சி விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு…!

பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்யப்பட்ட பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகனங்கள் நிற்கும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும், பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகே முனைய வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர். மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சோதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்