காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரசாந்த் (வயது 34 ). வீட்டை விட்டு வெளியேறிய இவர் திருச்சிக்கு வந்தார். திருச்சியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இவர், திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வரகனேரி ஓடத்தெரு பகுதியில் சாக்கடையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்து சாக்கடையில் வீசினார்களா? என்பன உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.