Rock Fort Times
Online News

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டாரா?- போலீசார் விசாரணை…!

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்தவர் திவ்யா (31). இவரது முதல் கணவர் விஜயகாந்த். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் மற்றும் 6 வயதில் தேஜஸ்வி என்ற மகள். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
திவ்யா, சென்னை புழல் காந்தி 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திவ்யாவுக்கு அவருடன் பணியாற்றி வந்த சீனிவாசன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சிறுமி தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி தேஜஸ்வியை குளிக்க வைப்பதற்காக சீனிவாசன் குளியல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில், சிறுமி மயங்கி விட்டதாக கூறிய சீனிவாசன் தனது தோளில் சிறுமியை தூக்கி போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் மற்றும் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரியவரும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்