Rock Fort Times
Online News

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி…!

சென்னையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தொடர்ந்து பல நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். இதனை முழுமையாக கட்டி முடிக்க மேலும் சில கோடிகள் தேவைப்படுகின்றது. இதற்கான நிதியை திரட்ட முடிவு செய்திருந்த, நாசர் தலைமையிலான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து அனைத்து நடிகர்களிடம் உதவி கோரி வருகிறார்கள்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். அதைத்தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்திக் என பல நடிகர்களும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான அறிக்கை ஒன்று நடிகர் சங்கத்தின் சார்பில் வெளியாகி உள்ளது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க பொது கட்டிட பணிகளை தொடங்குவதற்காக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் வழங்கி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்