திருச்சி லோக்சபா தொகுதியில், பா.ஜ. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க.வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, பா.ஜ. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருச்சியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, திருச்சி சாலை ரோட்டில் இருந்து, உறையூர் நாச்சியார் கோவில் வரை நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். ‘ரோடு ஷோ’வைத் தொடர்ந்து, உறையூர் நாச்சியார் கோவில் அருகே, பா.ஜ., கூட்டணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், பா.ஜ., கூட்டணியின் அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெறவைக்க வேண்டும். மீண்டும் பா.ஜ. ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பேசினார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட பா.ஜ., சார்பில், காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை, ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரப்பட்டது. தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பா.ஜ., மாவட்ட நிர்வாகி ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு மனு தாக்கல் செய்தார். அவசர வழக்காக விசாரித்த முரளி சங்கர், மாற்று வழித்தடத்தில் மாலை 5-30 மணி முதல், இரவு 8 மணி வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி சாலை ரோட்டில் இருந்து, உறையூர் நாச்சியார் கோவில் வரை ‘ரோடு ஷோ’ நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.