இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இடைக்கால முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.பின்னர் அவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் கட்சியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும், ஓபிஎஸ் கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்தி வந்தார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகள் நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
எனவே, கட்சியின் பெயர், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி
வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று(18-03-2024) தீர்ப்பளிக்கப்பட்டது.அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed, but trackbacks and pingbacks are open.