பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் “இந்தியா” என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்காளத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. அதேபோல, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து நிற்பதாக அறிவித்துள்ளன. ஆனால், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 63 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தன. இந்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஆம் ஆத்மியின் அதிஷி, சௌரப் பரத்வாஜ், காங்கிரஸின் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடும். குஜராத்தில் மொத்தமுள்ள 26 லோக்சபா தொகுதிகளில் 2 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் மீதமுள்ள 24 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.ஹரியானாவில் 9 தொகுதிகள் காங்கிரசுக்கும், ஒரு தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை தனித்தனியாக போட்டியிடும் என தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.