ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இன்று(10-02-2024) அதிகாலை லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வந்த லாரி டிரைவர் இதனை கவனிக்காமல் வேகமாக வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோத இருந்த நிலையில் விபத்தை தடுக்கும் பொருட்டு லாரியை வேகமாக திருப்பியுள்ளார்.
அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது அந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.