ஹிமாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர் வருண் குமார். இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியில் டிபெண்டராக விளையாடி வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடன் பழகிய 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை திருமண ஆசை காட்டி 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தற்போது அந்தப் பெண்ணிற்கு 22 வயதாகும் நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால், வருண் குமார் மறுப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஹாக்கி போட்டிகளுக்காக பெங்களூருவில் உள்ள சாய் ஸ்டேடியத்திற்கு வருகை தந்த போது திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் வருண் குமார் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார். புகாரின்பேரில், வருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேச அரசு, வருண் குமாருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.