திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக நாளை அண்ணா நினைவு தின ஊர்வலம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை(03/02/2024) காலை 8 மணி அளவில் கழக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் திருஉருவசிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது . இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் . இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.