திருவெள்ளரை பெருமாள் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாக்ஷ பெருமாள் திருக்கோயிலில் பிரமோத்சவம் கடந்த 10ம் தேதி தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடந்து வருகிறது. இதில் 9ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.. முன்னதாக இன்று அதிகாலை பெருமாள் தாயார் கண்ணாடி அறையில்இருந்து திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் திருத்தேரை பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். பிரம்மோத்சவத்தின் 10ம் நாள் திருவிழா நாளையும் 11 நாள் திருவிழா நாளை மறுநாளும்நடைபெற உள்ளது.

Prev Post