திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மொட்டையன் மாரியாயி தம்பதியின் மகனாக பிறந்தவா் பிரின்ஸ் தங்கவேல். தமிழக சட்டசபையில் இருந்து 1989 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெ.ஜா என இரண்டு அணிகளாக பிளவு பட்டபோது ஜெ அணி சார்பில் சேவல் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டு முசிறி தொகுதியில் வெற்றி பெற்றவர் பிரின்ஸ் தங்கவேல். தொடர்ந்து 1991 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரின்ஸ் தங்கவேலு. அதன் பிறகு புறநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீட் பிரின்ஸ் தங்கவேலுக்கு வழங்கப்படவில்லை. எனவே அக்கட்சியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய பிரின்ஸ் தங்கவேல் இரண்டாம் இடத்தைப் பெற்று மக்கள் மனதில் நின்றவர் அவா் . இதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டுஇவருக்கு சீட்டு மறுக்கப்பட்டது அப்பொழுது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மல்லிகா சின்ன சாமியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு நல்ல வாக்குகளை பெற்றார். அதன் பின் அதிமுகவில் இணைந்த இவா் தொடர்ச்சியாக அதிமுகவில் அங்கம் வகித்தாலும் அவருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. தற்போது திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று ( 18.12.2023 ) அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.