சென்னை – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ( 18.12.2023 ) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது. அதேபோல் காலை 5.45, 10.15 மணிக்கு தூத்துக்குடிக்கு செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து காலை 9.40, பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.