Rock Fort Times
Online News

திருச்சி மாநகரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீா் விநியோகம் ரத்து…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு , தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில்   பராமரிப்பு பணிகள் 26.10.2023 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது. எனவே, மண்டலம்-1 மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், TV கோவில், அம்மாமண்டபம், ABIEA நகர், மண்டலம்-2, தேவதானம் மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம்-3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது மலையப்ப நகர் பழையது,ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது,முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, MK.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M K. கோட்டை நாகம்மை வீதி, M K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப் பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், LIC காலனி புதியது. LIC காலனி பழையது, கே. சாத்தனூர், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் EB காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டிபுதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது,ரெங்காநகர், மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 27.10.2023 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 28.10.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்