Rock Fort Times
Online News

விஜயதசமி வித்யாரம்பம் – அரிசியில் அச்சரம் எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்….

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்சி உத்தமர் கோவிலில்  வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று ( 25.10.2023 ) சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. சரஸ்வதி ஆலயத்திலும், பள்ளிகளிலும்   நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்கினர். மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்