ஸ்ரீரங்கத்தில் பாரத மாதா யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு…
விஸ்வ இந்து பரிஷத் - போலீசார் இடையே வாக்குவாதம்...
விஸ்வ இந்து பரிஷத் 60 ஆம் ஆண்டை முன்னிட்டு இளைஞர்களிடத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு, மது இல்லாத தமிழகம், சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்தல், பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள், தாய் நாட்டிற்காக தியாகம் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பாக தேசம் தழுவிய விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர், விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் பாரத், திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன், பஜ்ரங்தள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி.திருமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாரதமாதா ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தேசியக்கொடி ஏந்தி சேதுராமன் தலைமையில் பாரதமாதா யாத்திரை செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்ததால் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்- போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து ரதம் கொடி இல்லாமல் செல்ல போலீசார் அனுமதி அளித்தனா். இதனையடுத்து ரதம், கொடி இல்லாமல் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் மட்டும் தனியாக கோவிலுக்கு நடந்து சென்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.