திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று ( 09.10.2023 ) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். இந்த நிலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த பெண் ஒருவா் திடீரென்று மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். இதனை பார்த்த போலீசார் அவரை செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தார் என்று அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.