Rock Fort Times
Online News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு நாடகம்- கனிமொழி எம்பி காட்டம்… 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.தலைமையில் திமுக மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று (07/10/2023) நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கருணாநிதி படத்திற்கு கனிமொழி எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

இதில், கனிமொழி எம்.பி. பேசியதாவது –

அரசியலில் திருச்சிக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கிறது.   பெண்களுக்காக போராடிய எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் பெண்களின் உரிமையை நிலைநாட்ட பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் தான். அவர் வழியில் வந்த கலைஞர், பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி மகளிர் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்தார். 33 சதவீதம் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அப்பொழுதே கலைஞர் ஏற்படுத்தி கொடுத்தார். அவர் வழியில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மகளிர் உரிமை திட்டம், கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறார். ஆட்சியில் இருக்கும் பொழுது மகளிர்க்காக பாடுபடாமல் ஆட்சி முடியும் தருவாயில் மகளிர் மசோதா சட்டத்தை பாராளுமன்றத்தில் பாஜக அரசுகொண்டு வந்துள்ளது. மகளிர் மசோதாவில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர். குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொகுதி மறு வரையறை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அதன் பிறகு தான் மகளிர் மசோதா நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இவர்கள் எப்பொழுது மகளிர் மசோதாவை கொண்டு வருவது? எப்பொழுது மக்கள் கணக்கெடுப்பு நடத்துவது என்பதெல்லாம் தெரியவில்லை.

மகளிர் மசோதா கண்துடைப்பு நாடகம் ஆகும்.  எனவே, நாம் இதனை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. மதம், மொழி, இனம் போன்றவற்றில் இணைந்திருக்கும் நம்மை பிரிக்க பாஜக முயல்கிறது. எனவே அதனை முறியடிக்க பெண்களாகிய நாம் போராட வேண்டும். வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் மாபெரும் கூட்டத்தில் பெண்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில்   அமைச்சா் கே.என்.நேரு பேசுகையில்,

தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், அவர்  மகளிருக்கு அளித்த திட்டங்களும் தான் என்பதை இந்த கூட்டம் வெளிப்படுத்துகிறது என்றார்.அமைச்சர்

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,

மகளிராகிய நீங்கள் தான் திமுகவின் பிரச்சார பீரங்கிகள். சென்னையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் திருச்சி மற்றும் தஞ்சையில் இருந்து மகளிர் அணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, திருச்சி மேற்கு மாநகர திமுக செயலாளரும், திருச்சி மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன், திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ, மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் அமலு எம்.எல்.ஏ மற்றும் மகளிர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

 

 

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்