தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண், என் மக்கள் நடைப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி பாதயாத்திரை மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை( 04.10.2023 ) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.