Rock Fort Times
Online News

திருச்சி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை…

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த 20-11-2021 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 பேர் ஆடு ஒன்றை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை பிடிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் விரட்டிச் சென்றார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி அருகே ஆடு திருடர்கள் 3 பேரும் சென்றபோது அங்குள்ள ரயில்வே சுரங்க பாலம் அருகே அவர்களை பூமிநாதன் மடக்கி பிடித்தார். அப்போது அவர்கள் பூமிநாதனை கடுமையாக தாக்கியதோடு கத்தியால் குத்தினர். இதில், பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் இடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பூமிநாதன் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கினார். இந்த கொலை தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் (வயது 19), 14 வயது மற்றும் 9 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மணிகண்டன் மீதான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் இன்று ( 29.09.2023 ) தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், நாட்டை ராணுவத்தினர் பாதுகாக்கின்றனர், நமது வீட்டை காவல்துறையினர் பாதுகாக்கின்றனர். பணி நேரத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், மற்ற 2 பிரிவுக்கு  7 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்