Rock Fort Times
Online News

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் மறுப்பு….

அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சிறுவர்களையும், மாணவர்களையும் கவர்ந்து வருபவர் டி.டி.எப்.வாசன். இவர் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை யூடியூப்பில் வெளியிட்டு அதன்மூலம் பிரபலமானவர். காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் சாலையில் தேய்ந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் யூடியூபர் வாசன் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட  நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி செம்மல் முன்பு இன்று ( 21.09.2023 ) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி யூடியூபர் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்