திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.