Rock Fort Times
Online News

தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராகவும், இதேபோல் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச்  செயலாளராகப் பணியாற்றி வந்த நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ். ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்