Rock Fort Times
Online News

விராலிமலை அருகே சாலை விபத்து : 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி…

விருதுநக்ர மாவட்டம், சிவகாசி ஒன்றியத்தை சேர்ந்த சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி(52), கிருஷ்ணபுரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யூ(52), நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்(52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம்(55) ஆகிய நான்கு பேர் இன்று ( 31.08.2023 ) சென்னையில் நடைபெறும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பிலான பேரணியில் பங்கேற்பதற்காக வாடகை காரில் சிவகாசியிலிருந்து நேற்று மாலை புறப்பட்டுள்ளனர். காரை பாஸ்கர்(53) என்பவா் ஓட்டியுள்ளார்.
இவர்கள் வந்த கார் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள வானத்திராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியுள்ளது. இதையடுத்து ஓட்டுநர் இடதுபுறமாக வண்டியை திருப்பிய போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரைலர் லாரி மீது மோதியது . இதில் சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி(52), கிருஷ்ணபுரி ஊராட்சிமன்ற தலைவர் அபிமன்யூ(52) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவ்விபத்தில்  காயமடைந்த நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்(52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம்(55), மற்றும் ஓட்டுநர் பாஸ்கர் ஆகியோா்  மணப்பாறை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸார் சம்பவ இடத்திற்க்கு சென்று  காயம் அடைந்தவா்களை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் டிரைலர் ஓட்டுநரான பெரம்பலூர் மாவட்டம், அனுப்பூர் வெப்பந்தட்டையைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஜெயவேலை(45) காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்