Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைது…!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் 5 நாட்கள் விசாரணை நடத்தி முடித்த நிலையில் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜி தம்பி அசோக் கட்டி வரும் பங்களா வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் அமலாக்கத் துறையில் ஆஜராகாமல் இருந்ததால் அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கேரள மாநிலம் கொச்சியில் இருந்த அசோக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்