திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் கிழக்கு கோபுரத்தின் சில பகுதிகள் சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. அவ்விடத்தை பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச். ராஜா பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவில்களில் அரங்கநாதர் கோவிலும் ஒன்று. இப்படிப்பட்ட இக்கோவிலையே அறநிலையத்துறை பராமரிப்பின்றி வைத்திருந்தால் மற்ற கோவில்களின் நிலை என்ன என்பதை எண்ணி பாருங்கள். தி.மு.க. அரசை பொறுத்தவரை அதிக ஊழல் செய்தவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை போல பல அமைச்சர்கள் செயல்படாமல் உள்ளனர். அவர்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஒருவர். அறநிலையத்துறையில் பெருமாளுக்கும், லட்சுமிக்கும், விரோதமாக செயல்படும் அதிகாரிகள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் பா.ஜ.க. வினர் அலுவலகம் புகுந்து முற்றுகை செய்வோம். நான் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மாதம் ஒரு மாவட்டம் சென்று கோவில்களின் நிலையை பற்றிய அறிக்கை கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.