திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது அபுபக்கர் சித்திக் ( வயது 39) என்பவர் 18,000 அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன், இந்திய மதிப்பு ரூ.14 லட்சத்து 74 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.