திருச்சி உலகநாதபுரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ரம்யா (வயது 32). சம்பவத்தன்று இவரிடம் பெரம்பலூரை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசி அறிமுகமாகி, ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ரம்யா, அந்த நபரின் வங்கி கணக்கில் நெட் பேங்கிங் மூலம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த நபர் லாப பணத்தை தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் ரம்யா புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணிடம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.